கிரிக்கெட் போட்டியில் பந்தை எச்சில் கொண்டு பளபளப்பாக்க தடை இது சாத்தியமா இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்துபந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ள நிலையில் அது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.


எச்சிலை பயன்படுத்தி ஷைன் செய்யப்படாவிட்டால் பந்தில் ஸ்விங் திறன் குறையும் என்றும் இதனால் போட்டிகளில் சுவாரசியம்  இருக்காது என்றும் பல தரப்பினரும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ள இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை ஷைன் செய்வது என்பது ஒரு வழக்கம் என்றும் அதை செய்யாமல் இருப்பதற்கு பயிற்சி அவசியம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் அதை மீண்டும் துவக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் ஐசிசியும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றை கவனத்தில் வைத்து பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்க ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது கிரிக்கெட்டின் சுவாரசியத்தை குறைக்கும் ஐசிசியின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பந்து ஸ்விங் ஆவது குறைந்து போட்டிகளில் சுவாரசியம் குறைந்துவிடும் என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரமுடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எச்சிலுக்கு மாற்று என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் போதிய பயிற்சி அவசியம் இந்நிலையில் பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்துவது என்பது ஒரு வழக்கம் என்றும் அதை பயன்படுத்தாமல் பௌலிங் செய்ய போதிய பயிற்சி அவசியம் என்றும் பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார் ஆனால் வீரர்கள் அனைவரும் இணைந்து இதை பயிற்சி செய்தால் இது சாத்தியமே என்றும் கூறியுள்ளார்