கட்டாரில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்.

தொழில் நிமிர்த்தம் காரணமாக கட்டாரில் தங்கியுள்ள 268 இலங்கை பிரைஜைகள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

அவர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலமே நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 268 பேரை ஶ்ரீலங்கன் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் குவைத்தில் இருந்து நாட்டிற்கு  அழைத்துவரப்பட்ட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 
செய்யப்பட்டதை கொண்டு, நேற்றைய தினம் கட்டாரிலிருந்து எமது நாட்டிற்கு வரவிருந்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்ததாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இதன் காரணமாககுறித்த விமானம் இன்று அதிகாலை இலங்கையை வற்தடைந்தது.