Monday, May 25, 2020

இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்



ஜூன் முதலாம் திகதியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் பயிற்சியைத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வருகிற முதலாம் திகதியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும் என்று அந்த அணியின்  பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் கடந்த வாரம் விரைவான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம் அப்போது மீண்டும் பயிற்சி மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதிலை பெற்ற பின்னர் கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாப்களுடன் பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன் என குறிப்பிட்டிருந்தார்.

முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் ஏனென்றால் ஒரு முறை பந்து வீசிய பின்னர் மீண்டும் பந்துவீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தது ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் இலங்கை சுற்றுப்பயணத்தை பிசிசிஐ ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு உடனடியாக கடிதம் எழுதியது.

அதற்கு பதிலளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!