இணைய வேகம் வினாடிக்கு 44.2 டெராபைட்- அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலியாவில் அதிவேக இணைய சேவை பதிவு செய்யப்பட்டதாக அந் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோனஷ் பல்கலைக்கழகம் ஸ்வின்பர்ன்  பல்கலைக்கழகம் மற்றும் ஆர்.எம்..டி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் தரவுகள் இணைய வேகத்தை விநாடிக்கு 44. 2டெராபைட் பதிவு செய்துள்ளனர்.


இந்த வேகத்தில் பயனாளர்கள் ஆயிரம் High-Definition(HD) படங்களை ஒரு வினாடிக்குள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பிரிட்டன் தகவல் பரிமாற்ற ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின் சமீபத்தில் செய்த ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் பிரிட்டனில் பிரோட்பேண்ட்டின் தற்போதைய வேகம் வினாடிக்கு 64 மெகாபைட்டுகள் ஆகும்.

அவுஸ்திரேலியா, இணையசேவை வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படும் நாடுகளில் எப்போதும் ஓரளவு இணைய வேகம் குறைவாக கொண்ட நாடாகத்தான் இருக்கும் மேலும் அங்கு இணையசேவை மெதுவாக உள்ளது என்ற புகாரே பயனாளர்களிடம் இருந்து அடிக்கடி வரும்.

இந்து புதிய அதிவேக இணைய சேவை ஏற்கனவே இருந்த தகவல் பரிமாற்ற சாதனங்களில் உள்ள 80 லேசர்களுக்கு பதில் மைக்ரோ கோம்ப் எனப்படும் சிறிய பொருளை மாற்றியதன் மூலம் பெற முடிந்தது.


இந்த மைக்ரோ கோம்ப் எனப்படும் சிறிய சாதனம் ஆய்வகத்திற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் பொருத்தப்பட்டது .

உலகில் ஒப்டிகல் பைபர்  பிரோண்ட்பேண்டுகளில் உள்ள ஒப்டிகல் சிப் மூலமாக உருவாக்கப்படும் அதிவேக இணைய சேவை இதுவே ஆகும்.

வருங்காலத்தில் இணைய சேவை எப்படி இருக்கும் என்பதற்கான கற்பனையை இந்த கண்டுபிடிப்பு கொடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய கூறுகின்றது.

தற்போதைய நிலையில் எந்த ஒரு பயனாளருக்கும் இணைய சேவையின் வேகம் மிகவும் அவசியமான ஒன்றாகும் .இந்த நவீன வாழ்க்கைமுறை பேண்ட்விட்த் கட்டமைப்பின் மேலிருக்கும் அழுத்தத்தை அதிகரிப்பதால் இந்த கண்டுபிடிப்பு பல்வேறு வகையான தொழிற்சாலைகளை மாற்றுவதற்கு உதவவுள்ளது என்பதை மோனாஸ் பல்கலைக்கழகத்தின் மின்சாரம் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியராக இருக்கும் பில் கார்கெரேயின் கூற்றாகும்.

கொரோனா வைரஸ் காரணமாக எடுக்கப்பட்ட முடக்க நிலை முடிவால் இணைய கட்டமைப்பு தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எதிர்பாராதவிதமாக மக்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க, பிறரிடம் பழக போன்றவற்றிற்காக இணைய கட்டமைப்பின் தேவை அதிகமாகும் என்றும் கூறுகின்றார் பேராசிரியர்.

எங்களின் இந்த ஆராய்ச்சி ஏற்கனவே இருக்கும் பைபர் இன் முழுத்திறனையும் காட்டுகிறது இது தற்போதைய மற்றும் வருங்கால தகவல் பரிமாற்றத்திற்கான முதுகெலும்பு ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

இது நெட்ஃபிலிக்ஸ் பற்றியது மட்டுமல்ல என்கிறார் அவர் இந்த இணைய வேகமானது தானாக இயங்கும் கார்கள் எதிர்கால போக்குவரத்து போன்றவற்றிற்கு பயன்படலாம் .அதுமட்டுமல்லாமல் மருந்தகம் கல்வி நிதி மற்றும் இணையத்தில் செய்யப்படும் வணிகம் மற்றும் தூரத்திலிருக்கும் குழந்தைகளிடம் தொடர்பு கொள்ளவும் இது பயன் பட வாய்ப்புள்ளது என கூறினார்். இது மிகப்பெரிய திருப்புமுனை எனக் கூறியுள்ளார் ஸ்வின்பார்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மோஸ்