அனுமதி கிடைத்த பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் விமான நிலையம் திறக்கப்படும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்து 12 மணித்தியாலத்திற்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றில் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை தாம் தற்போது காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்ததும் விமான நிலையத்தின் முழுமையான செயற்பாடுகளுக்காக திறக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை பாதுகாப்பான நாடு என கருதும் பல வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்