இரண்டாம் உலகப் போர் குண்டுவீச்சில் தப்பிய முதலை இறந்தது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பிய முதலை ஒன்று தற்போது இறந்துள்ளது.

இந்த முதலை நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என ஒரு காலத்தில் புரளி பரவியது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நேற்று இந்த முதலை உயிரிழந்தது.சேட்டர்ன் என்ற பெயரிடப்பட்ட அந்த முதலைக்கு வயது 84.

அமெரிக்காவில் பிறந்த இந்த முதலை 1936 பெர்லினில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவிற்கு பரிசாக வழங்கப்பட்டது ஆனால் 1943 இல்  நிகழ்ந்த குண்டு வீச்சு சம்பவத்தில் சேட்டர்ன் அங்கிருந்து தப்பியது பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து இந்த முதலையை கண்டுபிடித்த பிரிட்டன் ராணுவ வீரர்கள் இதனை சோவியத் யூனியனிடம் ஒப்படைத்தனர்.


1946 இல் இருந்து பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் உயிரியல் பூங்காவில் இந்த முதலையை பார்த்து சென்றுள்ளனர். சேட்டர்ன் 74 ஆண்டுகளாக வளர்ந்த பெருமை எங்களுக்கு உண்டு என அந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உலகத்திலேயே மிகவும் வயதான முதலையாக சேட்டர்ன் இருந்திருக்கலாம் எனவும் செர்பியாவில் பெல்கிரேட் உயிரியல் பூங்காவில் இருக்கும் மற்றொரு ஆண் முதலை தனது 80வயதில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.