26 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையான பேருந்து சேவை 🌟கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை வருகின்ற 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.