கிறிஸ் கெயில் மிகச் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தெரிவு.ESPN-cricinfo நடத்திய கருத்துக் கணிப்பில் கிறிஸ் கெயில் மிகச்சிறந்த டி20 வீரராக தெரிவு.உலகின் முன்னணி கிரிக்கெட் இணையத்தளமான  ESPN-cricinfo டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தெரிவு செய்யும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த இணையதள நிறுவனத்தின் பயனாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மேலும் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி குறுகிய காலத்திலேயே சாதனைகளை நிலைநாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகக்கூடுதலான இன்னிங்ஸ் ஓட்டங்கள் மற்றும் மொத்த ஓட்டு எண்ணிக்கை அதிவேக சதம் போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும்.

மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க இரண்டாம் இடத்தைப் பெற்றதாகவும்  ESPN-cricinfo அறிவித்துள்ளது.