தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி, அதன் ரேட்டிங் குறைவதற்கான காரணம் என்ன?


கூகுள் பிளே ஸ்டோரில் டிக் டாக் செயலியின் ரேட்டிங் ஒன்று தசம் ஊடாக குறைந்துள்ளது பல கோடி பயன்பாட்டாளர்களை கொண்ட டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோரில் திடீரென ரேட்டிங் குறைய என்ன காரணம்


கடந்த சில தினங்களாக  bantiktok, tiktokdown, ban tik tok in india போன்ற டிக் டாக்கிற்கு எதிரான பல்வேறு ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றன மேலும் டிக் டாக் தளம் பல சமூக விரோத கருத்துக்களை பகிர்வதற்கான தளமாக உள்ளது என கடும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன இதற்கு மிக பிரபலமான அமீர் சித்திக் என்பவர் பதிவிட்ட வீடியோ உதாரணமாகும்
யூடியூபில் பிரபலமாக செயல்படக்கூடியவர்கள் டிக்டாக்கில் வருபவற்றை பயன்படுத்தி யூடியூபில் நிகழ்ச்சி செய்கிறார்கள் என இன்ஸ்டாகிராமில் அமீர் சித்திக் வீடியோ ஒன்றை பதிந்துள்ளார்

எனவே அவர் விமர்சித்து 18 மில்லியன் சப்ஸ்கிரைபர்சை கொண்ட "கேரி மினாட்டி" என அழைக்கப்படும் அஜய் நகர் யூடியூபில் வீடியோ ஒன்றை பதித்து உள்ளார் ஆனால் அவர் பதிந்த அந்த வீடியோ யூடியூப் விதிமுறைகளை மீறி உள்ளதாக நீக்கப்பட்டுள்ளது.

இதனால் யூடியூப் மட்டும் டிக் டாக் பயனர்கள் இடையே இது ஒரு போட்டி போல உருவெடுத்தது.

இந்நிலையையில் டிக்டாக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட பைசல் சித்திக் என்பவர் பெண்ணொருவர் மீது ஆசிட் வீசுவது போன்ற காணொளி ஒன்றை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதுமட்டுமல்லாமல் டிக்டாக்கில் பலர் இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக பல கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதில் இந்தியாவின் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக டிக்டாக்கில் பலர் வீடியோ பதிவிடுகின்றார்கள் என்றும் இது சீன செயலி என்றும் எனவே அதை தடை செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தனர்.

ஹைசல் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை டிஜிபி ஷுபோத்திற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் டிக் டாக் தளம் இளைஞர்களை ஒரு பயனற்ற வாழ்க்கைக்கு தள்ளுகிறது என்றும் டிக் டாக் இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இணையதளத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

டிக் டாக் குறித்து பல விமர்சனங்கள் எழும் நிலையில் டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு செயலியை பயன்படுத்துவதிலும் கவனம் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதன் ஆபத்தை உணர்ந்து பயன்படுத்தவேண்டும் என்றும் அந்த செயலியால் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதை சரியான முறையில் எதிர்கொள்வதற்கான மனப்பான்மையுடனேயேஅதை நாம் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார் "யூ டர்ன்அயன் கார்த்திகேயன்.

சில சமயங்களில் கடைசிவரை நமது கவனத்திற்கு வராமல் கூட இந்த காணொளிகள் ஏதேனும் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என உலகத்திலிருந்து ஒரு காணொளியையோ அல்லது புகைப்படத்தையோ முற்றிலும் நீக்குவது என்பது ஒரு நெடிய மற்றும் கடினமான செயல் எனவே நமது பாதுகாப்பு நமது கையில் என்கிறார் கார்த்திகேயன்.

இக்கருத்துக்களைதான் தொழில்நுட்ப நிபுணர் விக்னேஸ்வரனும் கூறுகின்றார் டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு சமூக ஊடகங்களில் இந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கத்தான் செய்கிறது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றை கூட போலி செய்திகள் பரவல் தனி நபர்களையோ அல்லது குறிப்பிட்ட பிரிவையோ இழிவுபடுத்துவது போன்ற தகவல்களை பரப்புதல் ஆகிய ஆபத்துக்கள் உள்ளன என்கிறார் அவர்.

தொடர்ந்து ஓரிடத்திலிருந்து ஒரு வீடியோவை பதிவு செய்வதோ அல்லது ஒரு புகைப்படத்தை பதிவு செய்வதாலோ ஆபத்துக்கள் உள்ளன .சில சமயங்களில் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது அதற்கான செட்டிங்ஸ் குறித்து அந்த செயலிக்கு எந்த மாதிரியான அனுமதிகளை நாம் கொடுக்கிறோம் என்பதிலேயே நாம் பெரிதாக எந்த கவனம் செலுத்தவில்லை என்கிறார் விக்னேஸ்வரன்.

எனவே தற்போதைய சூழலில் ஒரு செயலி பயன்பாடு என்பது தனிமனிதர்களின் கட்டுப்பாட்டை பொறுத்ததே தவிர அதை தடை செய்வதால் பெரிதாக எந்த பலனும் இல்லை என்கிறார் அவர்.

ரேட்டிங்

இம்மாதிரியாக கூகுள் பிளே ஸ்டோரில் ரேட்டிங்கை குறைப்பதால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை ஆனால் அதிக ரேட்டிங் பெற்ற செயலிகளின் பட்டியலில் இதை பார்க்க முடியாது எதிர்காலத்தில் இதற்கான புதிய பயனர் குறையலாம் அதாவது இதனை டவுன்லோட் செய்பவர்கள் குறையலாம் ஆனால் டிக் டாக்கிற்கு என இருக்கும் தனிப்பட்ட பயனர்கள் அதனை பயன்படுத்தாமல் நிறுத்துவார்கள் என்றால் அதற்கு பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

"
பைட் டான்ஸ்" என்னும் சீன நிறுவனத்தால் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக் டாக்கிற்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனாளிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

டிக் டாக் தளம் சர்ச்சைகளை சந்தித்தது இது முதல் முறையல்ல 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிக் டாக் தளத்தில் ஆபாச வீடியோக்கள் பதியப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக்கிற்கு மூன்று மாத தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.