தனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமன்றி அனைத்து இன மக்களையும் சமமாக கருதவேண்டும்.தனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமன்றி சகல இன மக்களையும் ஆட்சியாளர்கள் சமமாக கருதி அவர்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் மடவல செய்திச்சேவையில் ஜூம் (Zoom)
செயலி மூலமாக நடைபெற்ற "சமகால அரசியல் கலந்துரையாடல்எனும் நேரடி நிகழ்ச்சியின்போதே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சட்டத்தரணி மற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரான முகம்மட் அலி சப்ரி அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலந்துரையாடலில் செய்தியாளரின் வினாவிற்கு பதிலளித்த மனோ கணேசன் அவர்கள் சிறுபான்மை இன மக்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்ற சில சந்தர்ப்பங்கள் பற்றி பேசிய வேளையிலேயே அவர் இவ்வாறு தனது கருத்துக்களை முன் வைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முகம்மட் அலி சப்ரி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சகல இன மக்களும் இனம் மதம் மொழி பேதமின்றி நாம் இலங்கையர் என்ற ஒரே குடையின் கீழ் பயணம் செய்வதே நாட்டின் அபிவிருத்திக்கும் தனி மனித வாழ்க்கைத்தர உயர்விற்கும் வழி வகுக்கும் என அவர் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு சுபீட்சமான  எதிர்காலத்தை உருவாக்குவதே எமது அரசியல் நோக்கம் எனவும் அதனை அடிப்படையாக கொண்டே சிறுபான்மை மக்களின் உயர்வுக்காக தான் போராடுவதாகவும் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நேர்காணலை பார்வையிட இந்த லிங்கை அழுத்தவும்