Saturday, May 23, 2020

குழந்தைகளுக்கு ஆபத்து கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாக பரவும் நோய்




குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி(KAWASAKI) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நோயானது ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனாவுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளில் வேகமாக பரவி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இலங்கையிலும் குறித்த நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மேலும் இங்கும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்் எனவும் அவர்் குறிப்பிட்டார். இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும், மனித உடலில் குருதியைகொண்டுசெல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால்  இந்த நோய் ஏற்படுகின்றது எனவும் இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது எனவும் குறிப்பிட்டார் .இதனால் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும் போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என குறிப்பிட்டார்.

இது ஒரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை இலகுவாக பாதிக்கும் ஆபத்து கொண்டது. பொதுவாக இந்த நோயின் அறிகுறிகளாவன, காய்ச்சல் அதற்கு பின்னர் நா சிவந்து ஸ்ரோபரி போன்று தோற்றமளித்தல் தோலில் சிவப்பு நிறமான பருக்கள்் ஏற்படல் தோல் உரிதல் உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல் அத்துடன் கழுத்தில் ஒரு வகை சொரி போன்று உருவாக்குதல் போன்றவை ஆகும்.

குறிப்பாக இந்த நோய் 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே பெரும்பாலும் பாதிக்கின்றது எனவே இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெறவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!