இலங்கை மிக சிறந்த முறையில் கொரோனாவிற்கு எதிராக போராடுகின்றது இந்திய பிரதமர் புகழாரம்.



ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு  எதிராக போராடுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இருவரும்  இன்று சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய விடயங்கள் குறித்து  கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தய ராஜபக்ச உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் ஜனாபதி கோத்தபாய ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தமது அயல்நாடு என்ற வகையில் தொற்றுநோய்் தாக்கம் மற்றும் பொருளாதார தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் டுவிட்டர் பக்கத்தில்் குறிப்பிட்டுள்ளார்.