Saturday, May 23, 2020

'அறியாமையின் இருளை அகற்ற வேண்டுமென்றால் கல்வி எனும் சூரியன் உதயமாக வேண்டும்’ - கலாநிதி வி. ஜனகன்


உலக அளவில் வைரஸ் தொற்றால் பெறுமளவு பாதிக்கப்பட்டிருப்பது சலுகைகளற்ற மாணவர் சமுதாயமே, இதனால் மாணவ சமுதாயம் பெறுமளவு பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பது எல்லோரும் அறிந்ததே. இம் மிக பெரிய சவாலினை எதிர்த்து போராடுவதற்காக இணையம் மூலமான கல்வி செயற்பாடுகளை தரம் உயர்த்துவது அவசியமாகிறது.இதனை கருத்திற்கொண்டு, கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் எண்ணக்கருவில் புதிய இணையம் மூலமான கல்வித் தளமொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
இக்கல்வி தளம் VJ Digital Uni' என பெயரிடப்பட்டகிறது. இந்த கல்வித்தளத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கல்வியியலாளர் கலாநிதி வி.ஜனகன், இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த இணைய மூல கல்வி செயற்பாட்டை மேம்படுத்த IDM Nations Campus கல்வி நிறுவனம் VJ Digital Uni உடன் இணைகிறது. தெரிவு செய்யப்பட்ட படிப்புகளுக்கு எந்தச் செலவும் இன்றி, மிகவும் தகுதிவாய்ந்த கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், குறிப்பாக பின்தங்கிய மாணவர்களின் தொடர்கற்றல் நடவடிக்கை இடைநிறுத்தப்படாமல் தடுக்கின்றது. 
இதன் தொடர்பில் கலாநிதி ஜனகன் கருத்து தெரிவிக்கையில், உலகெங்கிலும் நிலவும்  கொரோனா நோயின் தாக்கத்தால், பல மாணவர்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கலாம். ஆனால், அர்ப்பணிப்புடன் தங்கள் இலக்கை நோக்கி உழைப்பதன் மூலமும் அதைத் தங்கள் நன்மைக்காகவும் பயன்படுத்தினால் இணையமூல கற்றல் ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கும். இருப்பினும், இலங்கையில் பிரபலமடைந்து வரும் இணையமூல கற்றல் எனப்படும் இந்தப் புதிய முயற்சியில் தவிர்க்க முடியாத பல பிரச்சினைகளும் இருக்கின்றன.
IDM Nations Campusஇன் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி வி. ஜனகன், கல்வி நிர்வாகத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். தன் அனுபவத்தினூடாக இதுபோன்ற இணையமூல கற்றலை பாதிக்கும் சில பிரச்சினைகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளார். முதலில் நாட்டில் உள்ள டிஜிட்டல் பிளவு மற்றும் இந்த இடைவெளியைக் குறைக்க அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கொரோனாவன் எதிரொலி பல குடும்பங்களை சீர்குழைத்துள்ளது. இது, அன்றாட வருமானத்தில் தங்கி வாழ்பவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த இணையமூல கல்வியுடன் வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கல்களும் ஒரு முக்கியக் கவலையாக உள்ளது. மேலும், இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு வரும்போது அது மோசமாகி வருகிறது.
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் எல்லோருக்கும் தரமான கல்வி என்ற தொலைநோக்குப் பார்வைக் கொண்ட கலாநிதி வி. ஜனகன் அவர்கள், உண்மையிலேயே இத் தேவை உள்ள அனைவருக்கும் இலவச Online பல்கலைக்கழக தீர்வு என்னும் ஒரு புதுமையான கல்வி அணுகுமுறையைத் தொடங்கினார். இதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பு தேவையைப் பூர்த்தி செய்யும் சர்வதேச தரங்களுடன் மாணவர்கள் தங்கள் உயர் கல்வி சாதனைகளை அடைய முடியும்.
இந்த Online பல்கலைக்கழகம் VJ Digital Uni என தொடங்கப்பட்டுள்ளது. அங்கு உயர்கல்வியைத் தொடர விரும்பும் எவரும் இணையம் வழியாக இலவசமாகப் பதிவுசெய்யலாம். மற்றும் இங்கிலாந்து உட்பட பிற சர்வதேச விருது வழங்கும் அமைப்புகளிடமிருந்து உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வியைப் பெறமுடியும். இது உள்நாட்டிலும் உலக அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையமூல கல்வித் தளத்தின் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் தகுதிவாய்ந்த கற்கைநெறிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் கைக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும்.
அறியாமையின் இருளை அகற்ற வேண்டுமென்றால் கல்வி எனும் சூரியன் உதயமாக வேண்டும் என்று கலாநிதி வி. ஜனகன் மேலும் கூறுகிறார். இலங்கையில் மாணவர்களுக்கு இலவச மற்றும் தரமான கல்வி இல்லாதது வறுமையில் வாடும் குடும்பங்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளிலிருந்து தடுக்கும் ஒரு முக்கியக் காரணியாகும். தரமான கல்வி இல்லாமல், வறியவர்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த இயலாது. இலவச VJ Digital Uni, சந்தேகத்துக்கு இடமின்றி இந்த மாணவர்கள் தங்கள் வறுமை நிலையை வெற்றிகொள்ள, மற்றும் தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்கான முதல் படியாக இது அமையும். மேலும், அவர்களுக்கான சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குகின்றது. அது மட்டுமன்றி சுற்றியுள்ள பலருக்கும் எதிர்கால நாட்டுக்கும் பயனளிக்கிறது. இந்தச் இக்கட்டான சூழ்நிலைகளில், கலாநிதி வி. ஜனகனின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு, மற்றும் அவர் உருவாக்கியுள்ள இந்த இலவச இணையமூல கற்றல் ஒரு புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது. இதனூடாக, மாணவர்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை மிகவும் வினைத்திறனான முறையில் பூர்த்தி செய்ய முடியும்.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!