பாகிஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்து...!பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது!
விமானத்தில் சுமார் 85 பயணிகள் உற்பட 100 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கராச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏர்பஸ் ஏ320  என பெயரிடப்பட்ட குறிப்பிட்ட விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.