தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற இளைஞர் பலி


மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளவதற்காக முயன்ற யுவதி ஒருவரை மீட்க நீர்தேக்கத்தில் குதித்து அவரை காப்பாற்றிய இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கி காணாமற் போன நிலையில் நேன்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 22 வயதுடைய யுவதி காலை 10 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளவதற்காக மேல்கொத்மலை ஆற்றில் குதித்துள்ளார். இதனை கண்ட இளைஞர் அவரை காப்பாற்ற தானும் நீர்தேக்கத்தில் குதித்துள்ளார். குறித்த இளைஞர் லிந்துலை ரந்தெனிகல கொலனியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஹமீட் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
தற்கொலை செய்ய நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றி லிந்துலை வைத்தியலையில் அனுமதித்ததுடன் யுவதியை காப்பாற்ற முயன்ற மேற்படி இளைஞரை தேடி மீட்கும் பணியில் தொடர்ந்தும் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுட்பட்டு வந்தனர். 

இந் நிலையில் சுமார் 7 மணித்தியாலங்களின் பின்னர் இளைஞரின் சடலமானது நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.