பொதுநலமே சுயநலமாய் மக்களுக்காக களத்தில் கலாநிதி. ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள்.

பொதுநலமே சுயநலமாய் எமது மக்களுக்காக தொடர்ந்தும் 55 ஆவது 
நாளாக கொட்டும்  மழையென்றும் பாராமல் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சொல்லிலடங்கா துன்பங்களை எதிர் நோக்கியுள்ள வறிய மற்றும் தினசரி வருமானம் ஈட்டும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் அத்தியாவசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடும் மழை என்றும் பாராமல் கொட்டஹேன பகுதியில் வாழும் சுமார் 890 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் மற்றும் காய்கறி வகைகள் தலைவர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களால் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இதுவரை சுமார் 12, 000 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களால் பலஉதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.