ஒத்திவைக்கப்பட்டதா நாடாளுமன்றத் தேர்தல்?நாட்டில் பெறும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜீன் மாதம் 20 ம் திகதி நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களின்் தலைமையில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே இந்த முடிவானது எடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது


மேலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த திகதியில் மாற்றம் ஏற்படலாம் என முன்கூட்டியே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில் தேர்தலானது அடுத்த மாதம் 20ஆம் திகதி நடத்தப்படுவதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் தேர்தல் ஏற்பாடுகளுக்கு மேலும் 70 நாட்கள் வரை தேவைப்படும் எனவும், எனவே தேர்தலை வருகின்ற செப்டம்பர் மாதம் நடத்தலாம் எனவும் குறித்த சந்திப்பில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

எனினும் நாடாளுமன்றக் கலைப்பு பொது தேர்தல் திகதி ஆகிய வர்த்தமானிகளை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே இது குறித்து வெளிப்படையான இறுதி முடிவு ஒன்றை எடுக்க முடியும் எனவும் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது