ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன உற்பத்திகள் மீது புற்றுநோய் புகார்


ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன உற்பத்திகள் மீது புற்றுநோய் புகார்.விற்பனையை நிறுத்திய ஜான்சன் அன்ட் ஜான்சன்


ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


இந் நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படும் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல நூறு கோடி டொலர் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்பதாலேயே அவர்கள் இவ்வாறு தங்கள்் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்

டால்கை மூலப்பொருளாக கொண்ட தங்கள் உற்பத்திகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து வந்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் அந் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

டால்க் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கன் ஆகியவை சேர்ந்துள்ள ஒரு மென்மையான கனிமம் ஆகும்