மஹேல ஜெயவர்த்தன பேச்சால் சர்ச்சை
புதிதாக சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன எதிர்ப்பை வெளியிட்டு இருக்கின்றமை குறித்து  பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் முன்வைக்கப்பட்டன.தன் மீதான விமர்சனங்களுக்கு விடையளித்த மஹேல ஜெயவர்த்தன இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் விளக்கமளித்துள்ளார் 

புதிய மைதானம் ஒன்றை அமைப்பதற்கு தாம் வெளியிட்டுள்ள எதிர்ப்பு, அரசியல் ரீதியானது அல்ல என கூறியுள்ளார்

ஏற்கனவே, தற்போது இலங்கையில் இருக்கின்ற  மைதானங்களை கொண்டே இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தபட்டதுடன், உலகக்கிண்ணத் தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.  

அவ்வாறான சூழ்நிலையில் முதலில் இலங்கை உலகக்கிண்ணத் தொடரை நடத்துவதற்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும் எனவும்  அதில் வெற்றி பெறும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற நிதியை கொண்டு கட்டுமானத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.