Wednesday, May 20, 2020

அரிதான பல்லில்லாத டைனோசர் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல்லில்லாத டைனோசர் வகை ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அவுஸ்திரேலியாவில் 110 மில்லியன் ( சுமார் 11 கோடி) வருடங்களுக்கு முன் வாழ்ந்த மிக அரிதான பல் இல்லாத டைனோசரின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.


எல்ஃப்ரோசர் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். இந்த படிமம் மெல்பன் அருங்காட்சியகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமங்களை ஆராயும் நிகழ்வில் கலந்துக்கொண்ட தன்னார்வலர் ஜெஸ்ஸிகா பார்கரால் கண்டறியப்பட்டுள்ளது.


அந்தப் படிமத்தை ஆராய்ந்த போது அதற்கு நீண்ட கழுத்தும் குட்டையான கைகளும் லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்துள்ளது. .மேலும் அந்த விலங்கு 2 மீற்றர் நீளத்தில் இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் டான்சானியா சீனா அர்ஜென்டினாவில் கிடைத்த படிமங்கள் 6 மீட்டர் நீளம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த வகையான எல்ஃப்ரோசர் டைனோசர்கள் வளர்ந்த பிறகு அதிக அளவிலான இறைச்சி உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் இளம்வயது டைனோசர் மண்டை ஓடுகளில் இருந்து பெறப்பட்ட பற்கள் வளர்ந்த விலங்குகளின் மண்டை ஓடுகளில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!