Wednesday, May 20, 2020

அமெரிக்க பொருளாதாரம் 30% வரை சரிவை சந்திக்கும்



அமெரிக்கா பொருளாதாரம் 30% வரை சரிவை சந்திக்கும் என மத்திய வங்கியின் தலைவர் மற்றும் பிற செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரசின் பாதிப்பால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2021 இல் மீட்க முடியாது என அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கூறுகின்றார்.மேலும் பெருந்தொற்று  சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் 20-30% வரை எளிதாக சரிவை சந்திக்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர் பவல் சிபிஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கொவிட்-19 இற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவது மிகவும் சிரமத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முறையான திட்டத்தையும் மக்களுக்கான நிவாரண திட்டங்களையும் ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மார்ச் மாதத்தில் தொடங்கி இதுவரை 36 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாதவர்களுக்கான சலுகைகளை பெற வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

”இது ஒரு கடினமான காலம் மக்கள் அனுபவித்து கொண்டிருக்கும் துயரத்தை வார்தைகளால் சொல்ல இயலாது”

”பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும்”

”கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக  தாக்கவில்லை என்றால் இந்த வருடத்தின் பிற்பாதியில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத்தொடங்கும் ” என அவரது பேட்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!