கொரோனா வைரசினால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம்.


இது உலகளாவிய உற்பத்தியில் 6.4 முதல் 9.7 சதவீதம் வரை பாதிக்கும் என அமெரிக்க மத்திய வங்கி குறிப்பிடடுள்ளது. பாதிப்பு சதவீதம் கடந்த மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

கோவிட் -19 வைரஸ் உலகளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார சேதங்களை சரிபடுத்த கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்கிறார் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யுசுயுகி சுவாடா.

இந்த பாதிப்புகளில் இருந்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை  மீண்டும் உயர்த்துவதற்கு பல திட்டங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

பயணங்களும் இதற தொழில்களும் ஆறு மாதங்கள் வரை பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை அது ஏற்படுத்தும் என்றும் மூன்று மாதம் வரை இந்நிலைமை நீடித்தால் பாரியளவு பாதிப்பு ஏற்பாடாது என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பால் நிதிச்சந்தைகள் பாரியளவு பாதிப்பை கண்டுள்ளது.இதனால் உலகளாவிய ரீதியில் மந்தநிலை ஏற்படலாம் என அச்ச நிலை ஏற்பட்டுள்ளது எனவும் , இந்த தாக்கங்களிலிருந்து மீள வட்டி விகிதங்களை குறைப்பது உள்ளிட்ட பல தீவிர நடவடிக்கைகளை உலகில் உள்ள பல வங்கிகள் எடுத்துள்ளன.


உலகின் மிக்ப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா பெரிய பாதிப்பை கண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸினால் வேலையில்லாததால் சலுகைகளை எதிர்பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் மூன்று மில்லியனாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசின் பரவலினால் அமெரிக்காவில் வேலை செய்தவர்களில் கால் பங்கு பேர் வேலை இல்லாத காரணத்தினால் அரச சலுகைகளை எதிர்பார்த்து இருக்கின்றதாக அறியமுடிகின்றது.

”முன்பு கணித்ததை விட அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவாகவே மீளும்” என்று அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் போவெல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை சமாளிக்கப் பிரிட்டன் அரசு 123 பில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கியுள்ளது.