இன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இறுதிக் கிரியைஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின்  பூதவுடல் பல்வேறு இடங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (31) இறுதியாக கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலிருந்து ஹட்டன்- டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்துக்கு  எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, பிற்பகல் 4.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும்  பூர்த்தியாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அன்னாரின் பூதவுடலுக்கு மலையக மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மேலும் பூரண அரச மரியாதையுடன் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட உள்ளது.