மொரட்டுவை துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது.மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலும் சம்பவ தினத்தன்று (28.05.2020) அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது