மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு.மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .
பாதாள உலக கோஷ்டிகள் இரண்டிற்கு
இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் பகைமையின் விளைவால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இச்சம்பவத்தில் 39 வயதுடைய ரவூப் என்பவரே துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார் என தெரியவந்துள்ளது மேலும் இவர்
முன்னாள் பிரபல ரவுடி மாமாஸ்மியின் சகா என போலீசார் தெரிவித்தனர்

மாளிகாவத்தையில் இப்போது ராணுவம்  தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு பெரியாஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது