அதிர்ச்சி கொடுத்த சந்தானத்தின் திரைப்பட போஸ்டர்.நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவானடிக்கிலோனாதிரைப்படத்தின் மூன்று லுக்குகள் வெளியாகும் என சந்தானம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் , கடந்த மூன்று நாட்களாக முதல்பார்வை போஸ்டர்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான முதல் லுக் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கில்  உள்ளது.
இதைத்தொடர்ந்து , தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த லுக்கில் சந்தானம் உடை ஏதும் அணியாமல் இருப்பது போன்றும் ஒரே ஒரு பாத்திரத்தை மட்டும் அவர் கையில் வைத்து இருப்பது போன்றும் உள்ளது.

மேலும், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் சந்தானத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருப்பது போல இந்த போஸ்டர் உள்ளது.

இப்போது, அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இந்த லுக்கை அதிர்ச்சியுடன் தான் பார்த்து வருகின்றார்கள்.