Saturday, May 30, 2020

1377 ; தொலைபேசி அழைப்பின் ஊடாக இலவசமாக தத்தமது பாடசாலை ஆசிரியர்களிடம் கற்க முடியும்.






வீட்டலிருந்தவாறே எந்தவித கட்டணமும் இன்றி இணைய வசதி உடைய அல்லது இல்லாத எந்தவொரு தொலைபேசியையும் பயன்படுத்தி தமது பாடசாலை ஆசிரியர்களிடம் கற்பதற்கான வாய்ப்பை கொடுக்க கல்வி அமைச்சுடன் இலங்கையின் அதிவேக இணைய வலையமைப்பான டயலொக் ஆஸியாட்டா நிறுவனம் இணைந்துள்ளது.

மேலும் கல்வி அமைச்சின் 1377 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் 45 மாணவர்களுக்கு ஒரே தடவையில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த செயற்றிட்டத்திற்கான கணினி மென்பொருள் டயலொக் ஆஸியாட்டா நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக அனைத்து மாகாணங்களிலும் இருந்து 100 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

இதன் ஆரம்ப நிகழ்வு 28.05.2020 அன்று கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெருமவின் தலைமையில் கல்வியமைச்சில் இடம்பெற்றது.மேலும் இந்நிகழ்வில் டயலொக் ஆஸியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சபுன் வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொடண்டமை குறிப்பிடத்தக்கது.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!