Saturday, May 2, 2020

காதல் கணினி வைரஸ்

நிஜ காதல் கணினி வைரஸ் (LOVE-LETTER-FOR-YOU) 

உலகிலேயே  முதன் முதலாக  மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், அவர் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ளார். அந்த வைரசிற்கு காதல் வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் இவ் வைரஸ் கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியுள்தாகவும் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை

தற்போது 44 வயதாகும் ஒனெல் டி கஸ்மேன் என்பவரே இவ்வைரஸை உருவாக்கியுள்ளார் இவர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்  மேலும் அந்த நபர் கூறுகையில் தாம் அந்த காதல் வைரஸை சர்வதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில்  உருவாக்கவில்லை  என்றும், பிறர் கணினி பாஸ்வேர்டை திருடி இணையத்தினை இலவசமாக பயன்படுத்துவதற்காகவே இந்த வைரஸை உருவாக்கினேன் என்று கூறுகின்றார்.
நான் உருவாக்கிய வைரஸ் பல கண்டங்களைத் தாண்டி பல கணினிகளைத் தாக்கியதற்காக தாம் வருந்துவதாகக் கூறுகின்றார். மேலும் இவ்வைரஸானது 2000.05.04 அன்றே பரவியது என்றும் அதில் உங்களுக்கான காதல் கடிதம் (LOVE-LETTER-FOR-YOU) என்று மின்னஞ்சல் வரும். அதை கிளிக் செய்தால் அந்த வைரஸை கணினியைத் தாக்கும். இப்படியாக அந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வைரஸ் ஒரே நாளில் 4.5 கோடி கணினிகளைத் தாக்கியதாகவும் கூறினார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!